இந்திரா காலத்திய அவசர நிலையைவிட மோடி ஆட்சி மோசம்

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, இந்திரா காந்தி காலத்திய அவசர நிலையைவிட மோசமாக உள்ளது என்று பாஜகவில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

by Lenin, Apr 24, 2018, 20:40 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, இந்திரா காந்தி காலத்திய அவசர நிலையைவிட மோசமாக உள்ளது என்று பாஜகவில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கிலுள்ள தனது இல்லத்தில் யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, இந்திரா காந்தி காலத்திய அவசர நிலையைவிட மோசமாக உள்ளது. மத்தியில் இருக்கும் அரசால், நாட்டில் இருக்கும் எந்தச் சமுதாயமும் பாதுகாப்பாக உணரவில்லை.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் போனதற்கு மத்திய பாஜக அரசே முழுமுதற் காரணம். உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்கள் என நாட்டின் முக்கியமான அமைப்புக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் மோடி அரசு இறங்கியுள்ளது.

மத்திய அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ, என்ஐஏ போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களுக்குத் தொந்தரவு அளித்து வருகிறது. எனது விமர்சனத்தில் இருக்கும் உண்மை பற்றி, பாஜக-விலுள்ள தலைவர்களே பலர் தன்னைத் தொடர்பு கொண்டு பேசிவருகிறார்கள்.

பலர் தங்களது குரலை வெளிப்படுத்தத் தைரியமற்று இருக்கிறார்கள். தேர்தல் அரசியலில் இருந்து விலகினாலும், விவசாயிகள், முறைசாராத் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்காக, தான் தொடர்ந்து போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading இந்திரா காலத்திய அவசர நிலையைவிட மோடி ஆட்சி மோசம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை