அமெரிக்க காங்கிரஸ் சபை தேர்தலில் அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒட்டுமொத்தமாக 20 அமெரிக்கவாழ் இந்தியர்கள் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் காங்கிரஸ் சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் 20 பேர் பல்வேறு மாகாணங்களில் போட்டியிடுகின்றனர். அமெரிக்க அரசியல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்திய வாக்காளர்களின் புதுமைப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ம் அமெரிக்கவாழ் இந்தியர்களின் தேர்தல் நிதி மட்டும் சுமார் 15.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சேர்ந்துள்ளது. இதுவே பெரும் சாதனையாக அமெரிக்க காங்கிரஸ் சபைக்கான தேர்தலில் பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலுடன் அமெரிக்க செனெட் சபைக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. இதில் பலர் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சுயேச்சையாகப் போட்டியிடும் 54 வயதான சிவா அய்யாதுரை செனெட் தேர்தலுக்காக 'சிவா 4 செனெட்' (Shiva 4 Senate) என்கிற பிரச்சார திட்டத்தின் மூலம் இதுவரையில் 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.