`காங்கிரஸுக்கும் பாஜக-வுக்கும் என்ன வித்தியாசம்?- கடுகடுக்கும் மாயாவதி

by Rahini A, Apr 24, 2018, 21:32 PM IST

தலித்துகள் மீதான அக்கறையைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கும் பாஜக-வுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, சமீப காலமாக காங்கிரஸையும் பாஜக-வையும் ஒரே தராசில் வைத்து விமர்சித்து வருகிறார். குறிப்பாக, நீண்ட நாள் எதிரிக் கட்சியான சமாஜ்வாதியோடு தோழைமைப் பாராட்டி இரு தேசியக் கட்சிகளையும் எதிர்த்து வருகிறார்.

சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட சமாஜ்வாதியோடு கூட்டணி வைத்து பாஜக-வை வீழ்த்தினார் மாயாவதி. இந்நிலையில், உ.பி முதல்வர் ஆதித்யநாத் தலித் ஒருவர் வீட்டில் நேற்று உணவு சாப்பிட்டார்.

தலித்துகள் மீது அவர் தீண்டாமையைக் கடைபிடித்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த உணவருந்தும் விஷயத்தைக் கையெலெடுத்தார் ஆதித்யநாத். இதுவும் பரவலான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து மாயாவதி, `தலித்துகள் பற்றி பாஜக எப்படி நினைக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அவர்கள் தலித்துகளின் வீட்டிற்கு உணவு சாப்பிடச் சென்றால், அமைச்சர் ஒருவரின் வீட்டிலிருந்துதான் அந்த உணவு கொண்டுவரப்பட்டிருக்கும். அவர்கள் தலித்துகளின் நிழலில் படக் கூட விரும்பமாட்டார்கள். முன்னர் இதை காங்கிரஸ் கட்சி செய்து கொண்டிருந்தது.

தற்போது பாஜக இதை நடைமுறைப்படுத்தி வருகிறது. அவர்கள் இருவருக்கும் தலித்துகளைப் பற்றியோ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பற்றியோ எந்தக் கவலையும் இல்லை. ஆனால், தேர்தல் சமயங்களில் மட்டும் இதைப்போன்ற நாடகங்களில் ஈடுபடுவர்.

காங்கிரஸும் பாஜக-வும் ஒரே நாணயத்தின் இரு பக்கம் என்பதை நிரூபித்துள்ளனர். மக்களை அவர்கள் ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு உண்மை என்ன என்பது குறித்துத் தெரியும்’ என்று காட்டமாக பேசியுள்ளார்.

 

You'r reading `காங்கிரஸுக்கும் பாஜக-வுக்கும் என்ன வித்தியாசம்?- கடுகடுக்கும் மாயாவதி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை