காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் இரண்டாம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. கூட்டத்தை கூட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று ஒருபுறம் மத்திய அரசு கூறினாலும், மேற்குவங்க தேர்தலையொட்டி பிரதமர் மோடி அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் ஆயிரகணக்கானோர் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தலைவிரித்தாடும் சூழலில் மேற்குவங்கத்தில் பிரதமர் ஆயிரக்கணக்கானோரை கூட்டி பிரசாரம் நடத்துவது சரியா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்காரணமாக மேற்குவங்கத்தில் ராகுல்காந்தி மக்கள் நலன் கருதி பிரசாரத்தில் ஈடுபட மாட்டேன் என தெரிவித்துள்ளார். மம்தாவும் பிரசாரத்தை நிறுத்திவிட்டார்.
மேலும் இந்தியாவில் கொரோனா வேக்சின் மற்றும் ஆக்சிஜன் தட்டுபாடு நிலவி வரும் சூழலில் நேற்று ட்விட்டரில் #ResignMOdi என்ற ஹேஷ்டேக் டிரண்டாகி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்க கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று பதிவிட்டுள்ளார். அதில், லேசான அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ராகுல் காந்திக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.