தடுப்பூசி விலை அதிகரிப்பு - கல்லா கட்டும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்

by Ari, Apr 21, 2021, 16:39 PM IST

கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உயர்த்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் முழுவதும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸை 250 ரூபாய் என்ற விலைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் இன்ஸ்டிடியூட் உயர்த்தியுள்ளது. இனி கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு ரூ.400-க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கும் கொரோனா தடுப்பூசி டோஸ் விலையை உயர்த்தியுள்ளபோதும் மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை முந்தைய விலையான 250 ரூபாய்க்கே தொடர்ந்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தனித்தனியே விலையை நிர்ணயித்துள்ள சீரம் நிறுவனம், இந்த விலை அமெரிக்கா, ரஷியா, சீனாவில் விற்பனையாகும் கொரோனா தடுப்பூசிகளின் விலையை ஒப்பிடும்போது குறைவுதான் என கூறுகிறது.

வணிகத்தை பொறுத்தவரை ஒரு பொருளின் தேவை அதிகரிக்கும் போது, அதன் விலையும் அதிகரிக்கும். இது லாபம் தொடர்பான வியாபாரத்திற்கு பொறுந்தும். ஆனால் உயிரை கொல்லும் கோராவில் இருந்து நம்பை பாதுகாத்துக்கொள்ள பயன்படுத்தும் தடுபூசிக்கும் இந்த விணிக சூத்திரத்தை பயன்படுத்துவது அதிர்ச்சியளிப்பதாக வணிகவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

You'r reading தடுப்பூசி விலை அதிகரிப்பு - கல்லா கட்டும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை