“மண்டையை பிளக்கும் உச்சி வெயில்” கையில் லத்தி… வயிற்றில் 5 மாத கர்ப்பம்… - DSP ஷில்பாவை யாருன்னு தெரியுதா…?

by Ari, Apr 22, 2021, 15:05 PM IST

தனது கர்ப்ப காலத்திலும் கடமையே முக்கியம் என நிரூபித்துள்ளார் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஷில்பா சாஹு.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பஸ்தார் பகுதியில் விதிகளை மீறி பொதுமக்கள் வெளியே வரும் நிலையில், அவர்களைப் டிஎஸ்பி ஷில்பா சாஹு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்து வருகிறார்.

ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர், நினைத்திருந்தால் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வெடுத்து இருக்கலாம். ஆனால் கடமையே முக்கியம் என்று கடுமையான வெயிலில் நின்றுகொண்டு பணிகளை கவனித்து வருகிறார் டிஸ்பி ஷில்பா சாஹு.

கடுமையான கொரோனா சூழலிலும் வீட்டில் இருக்காமல் கடமையைச் செய்துவரும் ஷில்பா சாஹுவின் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து அவருக்குப் பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.

ஷில்பா சாஹு பல அதிரடிகளுக்குப் பெயர் பெற்றவர். சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல் நடவடிக்கைகளுக்காகக் காட்டிற்குள் சென்று பல அதிரடிகளைச் செய்தவர் ஷில்பா சாஹு.

இதற்கிடையே சத்தீஸ்கர் காவல்துறை இயக்குநர் டி.எம்.அவஸ்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஷில்பா இந்த நிலையில்கூட பணிபுரிகிறார். அவர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டு. ஷில்பா சத்தீஸ்கர் போலீசாரின் சொத்து" என்று குறிப்பிட்டுள்ளார்.

You'r reading “மண்டையை பிளக்கும் உச்சி வெயில்” கையில் லத்தி… வயிற்றில் 5 மாத கர்ப்பம்… - DSP ஷில்பாவை யாருன்னு தெரியுதா…? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை