2013ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளிப்பளித்துள்ளது.
ஆகஸ்ட் 2013இல், சாஜகான்பூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பமும் ஆசாரமுக்கு எதிராக பாலியல் வல்லுறவு வழக்கை பதிவு செய்தனர். அந்தப் பெண்ணின் தந்தை அந்த சம்பவத்துக்கு முன்பு அவரது சொந்த செலவில் ஆசாராம் பாபுவுக்கு ஆசிரமம் ஒன்றைக் கட்டியிருந்தார்.
அவரது 16 வயது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆகஸ்ட் 7, 2013 அன்று சிந்வாரா குருகுலத்தில் இருந்து அவரது தந்தைக்கு அழைப்பு வந்தது. அந்தப் பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாகவும் அதை ஆசாராம் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டது.
அடுத்தநாள் அந்தக் குடும்பம் கிளம்பி ஆசிரமத்துக்கு சென்றது. ஆகஸ்ட் 15 அன்று பேயை விரட்டுவதாகக் கூறி ஆசாராம் அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, ஆசாராமிற்கு எதிராக சாட்சி கூறிய ஒரு பத்திரிகையாளர் உட்பட ஒன்பது சாட்சியங்கள் தாக்கப்பட்டனர்.
இன்று தீர்ப்பு வெளிவருவதால் பெரும் வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என ஆசாராம் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையில் நீதிபதி தீர்ப்பை வழங்கினார். அவர் கைதாவது குறித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சாமியார் ஆசாராம் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளிப்பளித்துள்ளது.