இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துமா ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி..?

by Simon, Apr 27, 2021, 15:22 PM IST

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுப்பு மே 1 ஆம் தேதி இந்தியாவை வந்தடைகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. தற்போது, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன. அதேநேரத்தில், தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பல மாநிலங்கள் தெரிவித்து உள்ளன. இதனையடுத்து, தடுப்பு மருந்து உற்பத்தியை விரைவுபடுத்தும்படி மத்திய அரசு கேட்டு கொண்டு உள்ளது.

இந்தநிலையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்தை இந்தியாவிலும் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டுமென கோரி டாக்டர் ரெட்டி நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. அதன்படி மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அவசர கால பயன்பாட்டுக்காக ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு அனுமதி அளித்தது.

இதையடுத்து, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை வாங்க இந்தியா முடிவு செய்தது. இதன்படி, ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுப்பு மே 1 ஆம் தேதி இந்திய வந்தடையும் என ரஷ்யாவின் நேரடி முதலீடுகள் குழுத் தலைவர் கிரில் டிமித்ரேவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில் விரைவில் தடுப்பூசி வழங்குவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள 5 முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் ரஷ்யா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி இந்த ஆண்டு 85 கோடி தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும் என தெரிகிறது.

You'r reading இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துமா ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி..? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை