கொரோனாவால் இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கு கட்டணம் ரூ.1 மட்டுமே

by Ari, Apr 28, 2021, 08:07 AM IST

தெலங்கானாவில் ரூ.1 கட்டணத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் இறுதி சடங்குகள் நடத்தப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை கொடூரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இறுதி சடங்கில் கலந்து கொள்வதை தவிர்க்க விரும்புவதால் மருத்துவமனைகளில் சடலங்கள் குவிந்து கிடக்கின்றனர். அவற்றை சமூக சேவகர்கள் பெற்றுக்கொண்டு இறுதி சடங்கு செய்கின்றனர்.

கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய பொருளாதரம் உள்ள குடும்பங்கள் பணம் கொடுக்கின்றன. பொருளாதாரத்தில் நளிவடைந்தவர்களால் இடைத்தரகர்களுக்கும், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் பணம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.

இது போன்ற கடினமான நேரத்தில் தெலங்கானாவின் கரீம்நகர் நகராட்சி அதிகாரிகள் கொரோனாவால் இறந்தவர்களின் இறுதி சடங்குகளை செய்ய முன்வந்துள்ளனர்.

கரீம்நகர் நகராட்சி ஆணையர் வள்ளூரி கிராந்தி கூறுகையைில்,

“ஆதார் அட்டையின் ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒரு ரூபாய் வசூலிக்கிறோம். இது போன்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களை இறுதி சடங்குகள் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் நடுத்தர மனிதரை தவிர்க்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். மாநகராட்சி ஒரு ஒப்பந்தக்காரருக்கு ரூ.8 ஆயிரம் வழங்குகிறது. அதேசமயம் கொரோனாவால் இறந்த உடலாக இருந்தால் கூடுதல் தொகை வழங்கப்படுகிறது. இறந்தவரின் மரபுகள் மற்றும் மதங்களின்படி இறுதி சடங்குகள் செய்யப்படுகின்றன. கடந்த டிசம்பர் வரை 158 உடல்களுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டுள்ளது. அது முதல் இதுவரை கொரோனாவால் இறந்த 49 பேரின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டுள்ளது “ என்று வள்ளூரி கிராந்தி தெரிவித்துள்ளார்.

You'r reading கொரோனாவால் இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கு கட்டணம் ரூ.1 மட்டுமே Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை