மகாராஷ்டிரா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. தொடரும் உயிரிழப்புகள்..!

by Logeswari, Apr 28, 2021, 18:48 PM IST

மகாராஷ்டிராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் 4 பேர் உயிரிழந்தனர்.மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.30-மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து காரணமாக நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும்போது துரதிஷ்டவசமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகாத நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading மகாராஷ்டிரா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. தொடரும் உயிரிழப்புகள்..! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை