Friday, May 14, 2021

அல்லு அர்ஜூனை பற்றி ராஷ்மிகா கூறியது என்ன?? வைரலாகும் தகவல்..

by Logeswari Apr 28, 2021, 19:10 PM IST

அல்லு அர்ஜூன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் தயாராகும் படம் புஷ்பா. இதில் ராஷ்மிகா ஹீரோயின். பகத் பாசில் வில்லன். இவர்கள் தவிர ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ், வெண்ணிலா கிஷோர் உள்பட பலர் நடிக்கின்றனர்.சுகுமார் இயக்குகிறார். படத்தில் நடித்திருப்பது பற்றி ரசிகர்களுடன் வீடியோ சாட்டில் பேசினார் ராஷ்மிகா. அப்பொழுது அவர் கூறியதாவது:புஷ்பா மிகவும் நன்றாக வளர்ந்து வருகின்றது.

மும்முரமாக அதே சமயம் மிகவும் பாதுக்காப்பான முறையில் படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை நீங்கள் அனைவரும் மிகவும் ரசிப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். சுகுமார் இயக்கம்,மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு, அல்லு அர்ஜூன் கதாநாயகன். இதைவிட வேறென்ன வேண்டும் ரசிகர்களை மகிழ்விப்பதற்கு என்கிறார். அல்லு அர்ஜூன் எப்படிப்பட்டவர் உங்கள் அனுபவம் எப்படி என்று ரசிகர் ஒருவர் கர்த்தா கேள்விக்கு அல்லு அர்ஜூன் மிகவும் எளிமையானவர், இனிமையானவர் என்றார்.

You'r reading அல்லு அர்ஜூனை பற்றி ராஷ்மிகா கூறியது என்ன?? வைரலாகும் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை