தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் படிபடியாக உயர்ந்து செல்கிறது. இதனால் அங்கும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை கடை, காய்கறி கடை, உணவகங்கள், பால், இறைச்சி, மீன், கால்நடை தீவனம் ஆகிய கடைகள் இயங்கலாம். பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மால்கள் இயங்க அனுமதியில்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த ஊரடங்கானது ஏப்ரல் 30ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி அரசு துறை செயலர் அசோக்குமாரால் வெளியிடப்பட்ட உத்தராவில், உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் கண்டிப்பாக RTPCR பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் அறையில் நுழைபவர்கள் நெகட்டிவ் சர்டிபிகேட்டை காண்பிக்க வேண்டும். தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக் தடைவிதிக்கப்பட்டுள்ளது மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இருவர் மட்டுமே சான்றிதழ் வாங்க செல்லலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது