கொரோனா 2ம் அலை நாடு முழுவதும் கவலைகளை அதிகரித்துள்ளது. மேலும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை குறைக்க மகாராஷ்டிரா அரசுக்கு முகேஷ் அம்பானி கைகொடுக்க முடிவெடுத்துளளார். தனது ரிலையன்ஸ் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மருத்துவத்துக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் 100 டன்னை மகாராஷ்ட்ரா அரசுக்கு கொடுக்க அம்பானி முடிவெடுத்துள்ளார். இதனை மகாராஷ்ட்ரா அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.
குஜராத் ஜாம்நகர் ஆலையில் தான் ஆக்ஸிஜன் உற்பத்தி நடந்து வருகிறது. இதே ஜாம்நகரில் தற்போது 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்ட முகேஷ் அம்பானியின் மனைவியான நீட்டா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் பவுண்டேசன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஆக்சிஜனோடு கூடிய 1000 படுக்கைகள் கொண்ட இரண்டு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இந்த வாரத்திற்குள் 400 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும், அதற்கடுத்த இரண்டு வாரங்களில் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும், நிர்மாணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், மருத்துவ உதவி, உபகரணங்கள் உட்பட அனைத்து செலவுகளுமே ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மூலமாக ஏற்கப்படும். அதேநேரம் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் மட்டும் அரசு மூலம் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.