தமிழகத்தில் ஸ்டாலின், கேரளாவில் பினராயி.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்!

by Sasitharan, Apr 29, 2021, 21:30 PM IST

மேற்குவங்கத்தில் எட்டு கட்டத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. சிவோட்டர்ஸ் - ஏபிபி சேனல் தனது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸும், கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணியும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது.

சிவோட்டர்ஸ், ஏபிபி சேனல் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளின் முழு விவரம் பின் வருமாறு!

தமிழகம் (பெரும்பான்மைக்கு தேவை 118)

* திமுக கூட்டணி: 160 - 172

* அதிமுக கூட்டணி: 58 - 70

* அமமுக கூட்டணி: 0 - 4

மேற்கு வங்கம் (பெரும்பான்மைக்கு தேவை 148)

* திரிணாமுல் காங்கிரஸ்: 152 - 164

* பாஜக கூட்டணி: 109 - 121

* காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி: 14 - 25

புதுச்சேரி (பெரும்பான்மைக்கு தேவை 16)

* என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி: 19 - 23

* காங்கிரஸ் கூட்டணி: 6 - 10

* மற்றவை: 1 - 2

கேரளம் (பெரும்பான்மைக்கு தேவை 71)

* இடதுசாரிகள் கூட்டணி: 71 - 77

* காங்கிரஸ் கூட்டணி: 62 - 68

* பாஜக கூட்டணி: 0 - 2

அசாம் (பெரும்பான்மைக்கு தேவை 64)

* பாஜக கூட்டணி: 58 - 70

* காங்கிரஸ் கூட்டணி: 53 - 66

* மற்றவை: 0 - 5

You'r reading தமிழகத்தில் ஸ்டாலின், கேரளாவில் பினராயி.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்! Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை