மத்திய நிதி அமைச்சரையும் அவர் சார்ந்த சமுதாயத்தையும் திமுகவினர் தாக்கி பேசுவதாகவும், சமூக நீதி பேசும் திமுகவினர் இதைச் செய்வது சரியல்ல என்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் காட்டமாக கூறியிருக்கிறார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பிராமணர்கள் குறித்து விமர்சிப்பதை தொடர்ந்து செய்து வருகிறார் என்றும் வானதி கூறியுள்ளார். சமூக நீதி பேசும் திமுகவினர் இப்படி செய்வது சரி கிடையாது என்றும் பிராமணர்கள் பேசும் மொழியை குறிப்பிட்டு கேலி பேசுவது, பிராமணர்கள் பேசும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் காரணமாக தரம் தாழ்ந்த விமர்சனத்தை தயாநிதி மாறன் தொடர்ந்து செய்து வருவதாகவும் வானதி குற்றம் சாட்டியுள்ளார். நாங்களும் அவரது மனைவி, அவர் பேசுகின்ற மொழி குறித்து பேசினால் நன்றாக இருக்காது என்றும் பிராமணர்கள் பேசும் மொழியை கேலி செய்து பேசுவது திமுக மற்றும் திராவிடர் கழகத்தை சார்ந்தவர்கள் வழக்கமாக கொண்டிருப்பதாகவும் வானதி சாடியுள்ளார்.