மாட்டுக்கறி உண்பவர்கள் எனக் கூறி ஓடும் ரயிலில் இளைஞர் அடித்துக் கொலை
ஓடும் ரயிலில் மாட்டுக்கறி தின்பவர்கள் எனக் கூறி இளைஞர் ஒருவரை மர்மக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது.
ஹரியானா மாநிலம் பல்லாபகார் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜுனைத்கான் தனது சகோதரர் ஹாசிம், நண்பர் ஜாகீருடன் ரம்ஜானுக்காக புத்தாடைகள் வாங்க டெல்லி சென்றுள்ளார். ஷாப்பிங் முடித்து விட்டு, மதுரா ரயிலில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.. அப்போது, அவர்களது உடையைப் பார்த்து ரயிலில் பயணித்த பத்து பேர் கொண்ட கும்பல் 'மாட்டிறைச்சி உண்பவர்கள் ' எனக் கூறி கேலி செய்துள்ளது. அத்துடன் நிற்காமல். ஓடும் ரயிலியே ஜுனைத் கானை அடிக்கவும் செய்துள்ளனர். பல்லாபகாரில் ரயில் நிற்கும் போது ஜுனைத்கானை கத்தியாலும் குத்தியுள்ளது.
படுகாயமடைந்த ஜுனைத்கான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சக்காக அனுமதிக்கப்பட்டு பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜகீர் கூறுகையில், எங்களது உடையைப் பார்த்து அந்தக்கும்பல் எங்களை கேலி செய்தது. தலையில் அணிந்திருந்த குல்லாவை பறித்தனர். எல்லோரும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்ளை எதிர்த்து எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை'' என்றார்.
‘
வழக்குப்பதிவு செய்ப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.