64 கிராம் எடை கொண்ட கலாம்சாட் செயற்கைக்கோள்!

Jun 24, 2017, 14:02 PM IST

64 கிராம் எடை கொண்ட கலாம்சாட் செயற்கைக்கோள்!

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நினைவுகூறும் வகையில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகச்சிறிய செயற்கைக் கோள் 'கலாம்சாட்'  விண்ணில் செலுத்தப்பட்டது.

சுமார் 64 கிராம் எடையுள்ள இந்த செயற்கைகோள் 3டி டெக்னாஜி கொண்டு உருவாக்கப்பட்டது. ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் தலைவர் ஸ்ரீமதி கேசன் தலைமையில் 18 வயது மாணவர்  ரிஃபாத் ஷாருக் என்பவர் இதனைக் கண்டுபிடித்துள்ளார். 3டி பிரின்டிங் டெக்னாலஜி பயன்படுத்தி, செயள்கைக்கோள் தயாரிக்கப்பட்டதும் இதுவே முதன்முறை. நாசாவால் ஏவப்பட்ட இந்த செயற்கைக் கோள், 125 நிமிடத்தில் புவிவட்டப் பாதையில் இணைந்தது.


இது குறித்து ரிஃபாத் ஷாருக் கூறுகையில்,'' எனது குழுவின் ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் இந்த சாதனையைப் படைத்திருக்க முடியாது'' என்றார்.

You'r reading 64 கிராம் எடை கொண்ட கலாம்சாட் செயற்கைக்கோள்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை