ரூ.14,832 கோடி செலவில் நாடு முழுவதும் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள்

May 3, 2018, 12:53 PM IST

நாடு முழுவதும் ரூ.14,832 கோடி செலவில் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் நேற்று பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு திட்டங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில் இதுகுறித்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியார்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: பிரதான் மந்திரி ஸ்வாஸ்திய சுராக்ஷா யோஜனா திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.14,832 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைப்பதற்கும், 73 மருத்துவ கல்லூரிகளை தரம் உயர்த்துவதற்கும் அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறி பல மாதங்கள் கடந்த நிலையில், இன்னமும் இடம் தேர்வு செய்வதில் மத்திய அரசு தாமதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை