ஜெயித்தாலும் பதவி கிடைக்குமா?-அமித் ஷா சூழ்ச்சியில் எடியூரப்பா

அமித் ஷா சூழ்ச்சியில் எடியூரப்பா

by Rahini A, May 7, 2018, 17:49 PM IST

கர்நாடக பொதுத்தேர்தலில் ஜெயித்தாலும் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு பதவி வாய்ப்பு கிடைக்குமா என்பது மக்களின் ஓட்டுகளில் இல்லை.

கர்நாடகா மாநிலத்தின் பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஏழு நாள்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன.இந்நிலையில் ராகுல் காந்தி, எடியூரப்பாவை கேள்விகளால் துளைத்து எடுக்கும் ‘தி மோஸ்ட் வாண்டட்’ என்ற வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், எடியூரப்பா மீதான 23 ஊழல் புகார்கள் குறித்தும் கிழித்துத் தொங்கவிட்டுள்ளார் ராகுல்.

இதுபோதாதென இத்தனை நாள் முதல்வராக இருந்த சித்தராமையா வேறு எடியூரப்பாவை விடாமல் வறுத்தெடுத்து வருகிறார். எதிர்கட்சிகளின் விமர்சனங்களை சமாளித்து, மக்களின் கேள்விகளை சமாளித்து என தப்பிப் பிழைத்தாலும் சொந்தக் கட்சிக் களேபரங்களை சமாளிக்க முடியாமல் பரிதவித்து வருகிறார் எடியூரப்பா.

என்னதான் பா.ஜ.க ஆட்சி மோடி கையில் இருந்தாலும் மூளை என்னவோ அமித் ஷா உடையதாகதான் இருக்கிறது. கர்நாடகா பொதுத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் தேர்வின் போதே எடியூரப்பாவின் மகனுக்குத்தான் முதலில் சீட் கேட்கப்பட்டது. ஆனால், அது மறுக்கப்பட்ட எடியூரப்பாவுக்கே தந்தார் அமித் ஷா.

இடையில் பிரச்சாரங்களின் போதெல்லா, வாய் தவறி உளறுவதாக சொந்தக் கட்சி என்று கூட பாராமல் எடியூரப்பாவின் காலை நன்கு வாரிவிட்டார் அமித். இதெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்த எடியூரப்பா, ’தேர்தலில் வெற்றி கிடைத்தாலும் பதவி கிடைக்காது போலிருக்கே..’ என நொந்து வருகிறார்.

ஏனென்றால், கர்நாடாவில் பா.ஜ.க கால் ஊன்ற முக்கியக் காரணமான எடியூரப்பாவை பேருக்கு கழட்டி விடாமல் வைத்துக்கொண்டிருக்கும் அமித் ஷா, எடியூரப்பாவின் வயதைக் காரணம்காட்டி பதவி தராமலும், தந்தாலும் இடையிலேயே பறிக்கலாம் என்றும் எடியூரப்பாவுக்கே உறுதியாகத் தெரியும் என்றே கட்சி வட்டாரங்கள் சலசலத்து வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஜெயித்தாலும் பதவி கிடைக்குமா?-அமித் ஷா சூழ்ச்சியில் எடியூரப்பா Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை