பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முக்கிய நகரங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1992ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குஜராத் உள்பட நாட்டின் பல பகுதியில் ஏற்பட்ட மத கலவரங்களில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த துயரச் சம்பவத்தின் 25-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. இன்றைய தினம் அசம்பாவிதங்கள் நேராமல் தடுக்கவும், அமைதியை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது. அதன்படி, அயோத்தி உள்பட நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமானநிலையம், ரயில்நிலையம், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.