வயது முதிர்ந்த பெற்றோர்களை தத்தெடுத்த பிள்ளைகள், மருமகன், பேரன் என இருக்கும் உறவுகள் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தயாரித்துள்ள வரைவு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. மூத்த பெற்றோர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து முடிவு எடுக்கும் வகையில் அமைச்சகம் இப்படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
மேலும் மூத்த குடிமக்களின் பாதுக்கப்புக்காகவும் அவர்களின் பராமரிப்புக்காகவும் பிள்ளைகள் அல்லது பாதுகாத்து வரும் நபர் அதற்காக மாதம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்தனர். அதுவே சட்டமாக இருந்தது. தற்போது அது மாற்றம் செய்யப்பட்டு இனிமேல் அதிகமாக சம்பாதிக்கும் பிள்ளைகள் அதற்கேற்ப பராமரிப்பு தொகையினை கொடுத்தாக வேண்டும் என்ற புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பு பெற்றோரை கை விடும் நபர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த 3 மாத சிறை தண்டனை தற்போது தயார் செய்துள்ள அறிக்கையில் 6 மாதமாக உயர்த்தலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என சமூக நீதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.