மேற்குவங்க மாநில உள்ளாட்சி தேர்தலில் கலவரம்... மோதல்.. பதற்றம்!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல்.. கலவரம்.. மோதல்.. பதற்றம்!

by Suresh, May 14, 2018, 13:14 PM IST

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்றுவரும் உள்ளாட்சி தேர்தலில், திரிணமாமுல் காங்கிரஸ், பா.ஜ.கவினரிடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை ஏற்பட்டுள்ளது.

நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு பிறகு மேற்குவங்க மாநிலம் 20 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு உட்பட 48,650 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வந்த நிலையில் பங்கார், பில்கந்தா, கூச்பேகர் உள்ளிட்ட பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

கூச்பேகர் பகுதியில் போலீசார் முன்னிலையில் சுஜித்குமார் தாஸ் என்ற பாஜக தொண்டரை மேற்கு வங்க அமைச்சர் ரபீந்தரநாத் கோஷ்  கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் பில்கந்தா வாக்குச்சாவடியில் திரிணாமுல்- காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கலவரமான பகுதிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இரு கட்சி தொண்டர்கள் மோதலை தொடர்ந்து மேற்குவங்க மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.

இந்த கலவரத்தில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மேற்குவங்க மாநில உள்ளாட்சி தேர்தலில் கலவரம்... மோதல்.. பதற்றம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை