பள்ளிப் பாடப் புத்தகங்களில் இத்தனை தவறுகளா?

பள்ளிப் பாடப் புத்தகங்களில் இத்தனை தவறுகளா? அடுக்கடுக்காக குற்றச்சாட்டு

by Suresh, May 14, 2018, 14:05 PM IST

11-ஆம் வகுப்புக்கான பாடப் புத்தங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதப்பட்ட ஆண்டு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

​12 ஆண்டுகளுக்குப் பிறகு 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்களை சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இதில், 11-ஆம் வகுப்புக்கான பாடப் புத்தகத்தில் இளையராஜா, லதா மங்கேஷ்கர் விருது பெற்ற ஆண்டுகள் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் 11-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதுப்பட்ட ஆண்டு தவறாக குறிப்பிடட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

1891ஆம் ஆண்டு எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக 1881 ஆம் ஆண்டு என தவறாக இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், 9-ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், வைரமுத்து, ஆறு முறை தமிழக அரசு விருது வாங்கியுள்ளார் என்பதற்கு பதிலாக 4 முறை வாங்கினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

6-ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், காந்தி முதல் முறையாக 1896-ஆம் ஆண்டு சென்னை வந்தார் என்பதற்கு மாறாக 1919 என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், நிபுணர் குழுவை நியமித்து, பாடபுத்தகங்களை முழுமையாக ஆய்வு செய்து, தவறுகளை எல்லாம் சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பள்ளிப் பாடப் புத்தகங்களில் இத்தனை தவறுகளா? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை