இன்று மாலை கர்நாடகவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தின் நாயகனாக அமர உள்ளார் கே.ஜி.போபையா.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இன்று மாலை 4 மணிக்கு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். கர்நாடகா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்தன.
அதே நேரத்தில், `நாங்கள் தான் தனிப் பெரும் கட்சியாக விளங்குகிறோம். எனவே எங்களைத்தான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்’ என்று பாஜக தரப்பு கூறியது.
பாஜக-வால் நியமிக்கப்பட்ட கவர்னர் பலரும் எதிர்பார்த்தது போலவே எடியூரப்பாவை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதற்கு அடுத்ததாக எடியூரப்பா தலைமையிலான அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இதில் தலைவராக அமர்ந்து தீர்மான வாக்கெடுப்பை நடத்தி வைக்க உள்ளவஎ கே.ஜி.போபையா.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் இவர் கவர்னர் வஜுபாய் வாலாவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தலைவராக இருந்தவர். போபையாவும் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.