நிபா வைரஸை எதிர்கொள்ளத் தயார்!- கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

by Rahini A, May 22, 2018, 11:58 AM IST
கேரளாவில் இதுவரை 3 பேர் நிபா வைரஸ் மூலம் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, நிபா வைரஸ் பரவலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே யாரும் பதற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் பேசுகையில், `கோழிக்கோடுப் பகுதியைச் சுற்றி இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் நிபா வைரஸை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன.
எனவே, கோழிக்கோடு மருத்துவ கல்லூரிக்கு மட்டுமே நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கும் மக்கள் செல்லலாம். இதுவரை 8 பேருக்கு நிபா வைரஸ் இருப்பதாக அஞ்சப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர்.
நிபா வைரஸ், பாதிக்கப்பட்ட வௌவ்வால்கள் மூலமும், பன்றிகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்தும் பரவும். `சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நிபா வைரஸ் மூலம் உயிரிழந்த சபித் மற்றும் அவரின் சகோதரர் வசித்து வந்த வீட்டிற்குச் சென்று ஆய்வு நடத்தினர். அந்த வீட்டில் இருந்த கிணறு பல நாட்களாக பராமறிக்கப்படாமலும் வௌவ்வால்கள் அதிகம் இருப்பது தெரிய வந்தது.
அதை அதிகாரிகள் மூடி, சீல் வைத்துள்ளனர். எனவே, அந்தக் கிணற்றில் இருந்து மேலும் வௌவ்வால்கள் வராமல் இருக்கும்’ என்று கூறியுள்ளார் ஷைலஜா. மேலும் அவர், மரத்திலிருந்து கீழே விழும் பழங்களை மக்கள் சாப்பிட வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
`நிபா வைரஸ் குறித்தான விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளோம். மேலும், மத்திய அரசின் சார்பிலும் பல மருத்துவக் குழுக்கள் நிபா வைரஸ் தாக்கத்தைத் தடுக்க தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது’ என்றவர், `ஏற்கெனவே மத்திய அரசின் ஒரு குழு பாதிக்கப்பட்ட இடத்துக்கு வந்துவிட்டது.
மேலும் ஒரு குழு நாளை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று விளக்கினார். கோழிக்கோடு பகுதியிலேயே இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, அங்கு உள்ள கோழிக்கோடு மருத்துவ கல்லூரிக்கு கேரள அரசு 20 லட்ச ரூபாயை அவசர நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நிபா வைரஸை எதிர்கொள்ளத் தயார்!- கேரள சுகாதாரத்துறை அமைச்சர் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை