சல்மான்கானை தாக்கினால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என விஎச்பி முன்னாள் தலைவர் பிரவின் தொஹாடியா தொடங்கியுள்ள புதிய அமைப்பு அறிவித்துள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சல்மான்கான் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் படம் லவ்ராத்திரி. இந்த திரைப்படம் நவராத்திரி பண்டிகைக்கு திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த செயல் இருப்பதாக ஹிந்து ஹி ஆகே அமைப்பின் ஆக்ரா பிரிவு தலைவர் கோவிந்த் பராஷர் தெரிவித்துள்ளார். மேலும், சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் எனவும், மாநில அரசுகள் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
விஷ்ய இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்து பின்னர், அங்கிருந்து விலகியவர் பிரவீன் தொஹாடியா. இவர் சமீபத்தில் ஹிந்து ஹி ஆகே என்ற புதிய அமைப்பை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.