பினாமி சொத்து குறித்து தகவல் தெரிவித்தால் 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பினாமி சொத்துகள் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்கள், 2016ஆம் ஆண்டு நவம்பர் ஒன்று முதல் நடைமுறையில் உள்ளது.
அதன்படி, பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறையிடம் ரகசிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு பினாமி சொத்து மதிப்பில் பத்து விழுக்காடு பரிசு வழங்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், பினாமி சொத்து விவரம் மற்றும் வருமான வரி ஏய்ப்பு குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய்பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தகவல் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணம் பற்றி தகவல் தருவோருக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.