ராமாயணக் காலத்தில் தற்போது இருந்த நவீன தொழில்நுட்பங்கள் இருந்ததாகவும், சீதை டெஸ்ட் டியூப் பேபி என்றும் நாரதர் நடமாடும் கூகுள் என்றும் உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்த திறன்மேம்பாட்டு போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா, “புரணாகாலத்தில் இருந்த நாரதர் அனைத்து தகவல்களை அறிந்தவர். அவர் தற்போதை கூகுள் தளத்தை போன்றவர்” என்றும்,
“ராமாயணத்தை எடுத்துக்கொண்டால், ராமனின் மனைவி சீதா தேவி பூமியில் இருந்து தோன்றியவர் என்கின்றனர். என்னைப்பொறுத்தவரை இப்போது இருக்கும் டெஸ்ட் டியூப் பேபி போன்றுதான் அந்த காலத்தில் சீதா தேவி பூமியில் இருந்து பிறந்தார்” என்றும் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சரின் இந்த பேச்சு கிலி கிளப்பியுள்ளது. பாஜக தலைவர்கள் இதுபோல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையிலும், புராணத்தையும், அறிவியலையும் தொடர்பு படுத்தி பேசி, நகைப்புக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகின்றனர்.