மத்திய பிரதேச மாநில பொதுத்தேர்தலுக்குள் அம்மாநில வாக்காளர் பட்டியலில் உள்ள நூற்றுக்கணக்கான குழப்பங்களை தீர்க்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் போலி வாக்களர்கள் குறித்த பிரச்னையின் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறுபது லட்ச போலி வாக்காளர்கள் நிறைந்த பட்டியலுன் தேர்தல் ஆணையத்திடம் மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
இதையடுத்து வீட்டு வீட்டுக்குச் சென்று வாக்காளர்கள் கனக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு தவறுகள் களையப்பட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் நான்கு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது. மேலும், தவறுகள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நான்கு குழுவினருக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்த விசாரணையில் மேற்சொன்ன நான்கு குழுக்களும் இன்றிலிருந்து தங்கள் வேலையைத் தொடங்கி இன்னும் நான்கு நாள் அவகாசத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.