நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்துக் கொண்ட விழுப்புரம் மாணவியை தொடர்ந்து, ஐதராபாத் மாணவி 10வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், கச்சிக்குடா பகுதியை சேர்ந்த மாணவி ஜஸ்லீன் கவுர் (18). இவர், கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு எழுதி இருந்தார். நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியான நிலையில், மாணவி ஜஸ்லீன் கவுர் எதிர்பார்த்த மதிப்பெண்களை அவர் பெறவில்லை. இதனால் மனசோர்வுடன் காணப்பட்டுள்ளார் ஜஸ்லீன்.
இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் அபிட்ஸ் பகுதியில் அமைந்துள்ள 10 மாடி மயூரி வணிக வளாகத்துக்கு தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார். பின்னர், அங்கிஜஸருந்து விறுவிறுவென அழுதுக்கொண்ட 10வது மாடிக்கு சென்ற ஜஸ்லீன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் குதித்தார். இதனால், ஜஸ்லீன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், டெல்லி துவாரகா 12வது செக்டாரை சேர்ந்த மாணவர் பிரணவ் மெஹந்திரத்தா கடந்த இரண்டு முறையும் நீட் தேர்வில் தோல்வியடைந்தார். இதனால், இம்முறை நீட் தேர்வு எழுதினார். இதிலும், பிரணவ் தோல்வியடைந்ததால் விரக்தியில் 8வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
நீட் தேர்வில் தேர்ச்சிபெற மாணவர்களுக்கு மூன்று முறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படுவதால் இதுபோன்ற துயர முடிவுகளுக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.