காவிரி விவகாரம் - கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஆர்டர்!

கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஆர்டர்!

by Radha, Jun 9, 2018, 12:48 PM IST

காவிரி மேலாண்மை ஆணையம் குழு உறுப்பினர் பட்டியலை வரும் 12-ஆம் தேதிக்குள் சமர்பிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Hogenakkal.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகளும், உறுப்பினர்கள் நியமன பெயர் பட்டியலை அனுப்பி வைக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியது. அதன்படி, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று மாநில அரசுகள் உறுப்பினர்கள் பட்டியலை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளன.

ஆனால் காலம் தாழ்த்தி வந்த கர்நாடகா அரசு, துறை அமைச்சர் பதவி ஏற்றதும், உறுப்பினர் பட்டியல் வழங்கப்படும் என மத்திய அரசுக்கு விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், வரும் 12-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு உறுப்பினர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசியல் குழப்பம் தீர்ந்து அமைச்சரவை அமைக்கப்பட்டதால், உடனடியாக பட்டியலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு உறுப்பினர்கள் பட்டியலை தாக்கல் செய்தததும், முழு குழு உறுப்பினர்கள் பட்டியல் மற்றும் முதல் கூட்டத்திற்கான தேதியை நிர்ணயித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

You'r reading காவிரி விவகாரம் - கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஆர்டர்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை