மும்பைவாசிகளுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை

Jun 9, 2018, 21:01 PM IST

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, மும்பை வாசிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதை தொடர்ந்து, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.

மகாராஷ்டி மாநிலத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, மும்பை, தெற்கு விதர்பா மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பை நகரமே தண்ணீரில் மூழ்கியது. வீடுகள் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் நீர் தேங்கி இருப்பதால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

You'r reading மும்பைவாசிகளுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை