சென்னையில் 10 கல்வி மண்டலங்களில் மட்டும் 819 குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.
+தமிழக அரசு பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை நடைபெற்றது. இதில், சென்னைக்கு உட்பட கல்வி மையங்களில் மட்டும் சுமார் ஆயிரம் சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்தது. அதன்படி, சென்னைக்கு உட்பட 10 கல்வி மண்டலங்களில் மட்டும் 819 குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதில், 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 454 சிறுவர்களும், 365 சிறுமிகள் பள்ளிக்கு செல்லவில்லை என்றும் கணக்கெடுப்பில் கூறப்படுகிறது. பெற்றோர்களுக்கு விழிப்புரண்வு இல்லததாலே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது இல்லை என்று கூறப்படுகிறது. இதற்காக, மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.