ஹிமாச்சலப்பிரதேச அரசு புதிதாக ஹிலிகாப்டர் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹிமாச்சலப்பிரதேசத்திலிருந்து சண்டிகர் வரையில் இந்த ஹெலிகாப்டர் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஹிமாச்சலப்பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் அறிவித்துள்ளார்.
ஹிமாச்சலப்பிரதேசத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவே இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிம்லாவிலிருந்து சண்டிகருக்கு 20 நிமிடங்களில் ஹெலி- டாக்ஸியில் சென்று அடைந்துவிடலாம்.
கூடுதலாகத் தற்போது மாநில அரசைத் தாண்டி மத்திய அரசு அனுமதித்தால் ஹிமாச்சலப்பிரதேச அரசு மலைப்பாதையான மணாலியில் இருந்து ரோட்டாங் பாதை வரையில் ஹெலி டாக்ஸி திட்டத்தை அமல்படுத்தவும் தயாராக உள்ளது.
சாதாரணமாக சிம்லாவில் இருந்து சண்டிகர் விமான நிலையத்துக்கு டாக்ஸியில் பயணித்தால் 1,200 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையில் செலவு ஆகும். ஆனால், ஹெலி- டாக்ஸியில் 200 ரூபாய்க்கு 20 நிமிடத்தில் பயணம் சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது.