நீட் தேர்வுகள் இனி வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த தேர்வின் போது தமிழகத்தில் பல மாணவர்களுக்கு அவரவர் மாவட்டத்தில் தேர்வு மையம் அமைக்கப்படாமல் வெவ்வேறு மாநிலங்களில் கூட தேர்வு மையம் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால் தேசிய அளவில் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இதையடுத்து இனி வரும் ஆண்டுகளில் நீட் தேர்வுகளில் புதிய மாற்றங்கள் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் ஆண்டு முதல் மாணவர்கள் அவர்களுடைய மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும்.
நீட் கேள்விகள் தயாரிக்க நன்கு தமிழ் மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்ப வேண்டும். மாநில அரசின் பாடத்திட்டத்திலும் நீட் கேள்விகள் கேட்கப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.