ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜய்குமார் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநரின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சிக் கலைக்கப்பட்டு தற்போது ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநர் என்.வேரா ஆட்சிப் பொறுப்பில் இன்னும் ஆறு மாத காலங்களுக்கு இருப்பார். இவருக்கு ஆலோசகராகத் தற்போது விஜய்குமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூடுதலாக அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பிபி வியாஸ் கூடுதல் ஆலோசகராகத் தன் பணியைத் தொடர்வார். விஜயகுமார் ஐபிஎஸ் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தமிழகத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சுட்டுப்பிடிக்கும் படைக்குத் தலைமை தாங்கியவர் விஜயகுமார்.
இவர் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி வந்தார். இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், “இந்த சூழலில் எனது பதவி குறித்து பெரிதாக எதையும் சொல்ல ஒன்றுமில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் உடன் பணியாற்ற உள்ளேன். நல்ல குழுவோடு இணைய உள்ளேன்” என்றுள்ளார்.