சமூக ஊடகங்களை கண்காணிக்க புதிய குழு!

மத்திய அரசு ஒரு புதிய கண்காணிப்பு மையத்தை உருவாக்குகிறது!

by Radha, Jun 23, 2018, 10:55 AM IST

சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளை கண்காணிக்க, மத்திய அரசு ஒரு புதிய கண்காணிப்பு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

Social media Monitoring

சமகாலத்தில் தவிர்க்க முடியாத இன்னொரு சக்தி சமூக வலைதளங்கள். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை நிகழ்காலம் இதற்குள் உழன்று கொண்டிருக்கிறது. மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகி விட்ட இந்த சமூக வலைதளங்கள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனால், இதனை கண்காணிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் படி, வருடத்தின் 365 நாட்களும், தினமும் 24 மணி நேரமும் இயங்கும் 'சமூக ஊடக கண்காணிப்பு கேந்திரத்தை' உருவாக்க, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வெளியிட்டுள்ளது,

டெல்லியில் 20 பேரை கொண்ட, தலைமையகம் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள 716 மாவட்டங்களில் தலா ஒரு ஆப்ரேட்டர் என்ற விதத்தில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த உறுப்பினர்கள், ஒரு பகுதியில் மிக அதிகம் பேசப்படும் விவகாரம் குறித்த , தகவல்களையும் அதன் தாக்கங்களையும் சேகரித்து, அறிக்கையாக மத்திய அரசிடம் தாக்கல் செய்ய உள்ளது.

சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் வெளியானால், அவற்றையும் உடனடியாக கண்டுபிடித்து அரசுக்கு இந்த ஆப்ரேட்டர்கள், தெரிவிப்பார்கள். பொய் செய்திகள், வதந்திகளை பரப்பவர்கள் மீது ஐ.பி.சி 153 மற்றும் 295ஆம் பிரிவிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதன்மூலம் சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்பப்படுவதையும், அதன் மூலம் ஏற்படும் கலவரங்களையும் கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

You'r reading சமூக ஊடகங்களை கண்காணிக்க புதிய குழு! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை