விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் வரும் 28ம் தேதி முதல் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதனால், மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரசும் ஆயத்த பணிகளை இப்போதிலிருந்தே தொடங்கிவிட்டனர். பாஜகவுக்கு எதிராக எதிர்
கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியிலும் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற, கர்நாடக சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிப்பெற்று, பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெருவதற்கான இலக்கை நோக்கி பல்வேறு உத்திகளை செயல்படுத்த பாஜக தயாராகி வருகிறது.
அந்த வகையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன் தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி தொடங்குகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் சந்த் கபீர்நகர் மாவட்டத்தில் உள்ள மகார் என்ற இடத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச இருக்கிறார். இதற்காக, ஏற்பாடுகள் பிரம்மாண்டமாய் செய்யப்படுகிறத. சுமார் இரண்டரை லட்சம் பேரை பொதுக் கூட்டத்தில் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, 11 மாவட்ட பாஜக தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.