கார் ஓட்ட தடை இன்றுடன் நீங்கியது: சவுதி அரேபியா பெண்கள் மகிழ்ச்சி

by Isaivaani, Jun 24, 2018, 10:07 AM IST

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் நீக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகளை நிறைந்தது சவுதி அரேபியா நாடு. ஆனால், சமீபகாலமாக கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு வாகனம் ஓட்டுதல், பள்ளிகளில் விளையாட்டுப் பயிற்சி, 38 ஆண்டுகளுக்குப் பின் தியேட்டர் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டது.

இங்கு, பெண்கள் கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டிந்தது. இங்கு, கார் ஓட்ட தடை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990ம் ஆண்டுகளில் இருந்தே பெண்கள் உரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீறி கார் ஓட்டிய பெண்களுக்கு அபராதமும், கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று முதல் பெண்கள் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Get your business listed on our directory >>More Akkam pakkam News

அதிகம் படித்தவை