ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்- நீதிபதி

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்

by Radha, Jun 29, 2018, 09:01 AM IST

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Court

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியர் சிவநேசன், அதே பள்ளியில், 6 வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆசிரியர் சிவநேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த சிவநேசன், தண்டனையை நிறுத்தி வைத்து, இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி டீக்காராமன், "மாணவர்களுக்கு கல்வியுடன், ஒழுக்கத்தையும் சேர்த்து போதிக்க வேண்டியது ஆசிரியரின் கடமை.

மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர் சிவநேசன் தகாத முறையில் நடந்துள்ளார்" எனக் கூறி தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் விடுவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

You'r reading ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்- நீதிபதி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை