புதுச்சேரி பட்ஜெட்... எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

புதுச்சேரி பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

by Radha, Jul 2, 2018, 13:16 PM IST

2018-19ஆம் ஆண்டிற்கான புதுச்சேரி நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

pondicherry

நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி முழு நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

ஆனால் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டமன்ற நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நிதி நெருக்கடி, அரசின் தினசரி செயல்பாடுகளில் ஆளுநரின் தலையீடு, துறைமுக விரிவாக்கம், வீட்டு வரி, மின்கட்டணம் மற்றும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் முதலமைச்சர் நாராயணசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

You'r reading புதுச்சேரி பட்ஜெட்... எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை