கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஹெலிகாப்டரை அனுப்பி கண்ணாடி வாங்கிவர சொன்ன சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமாக இருப்பவர் எடியூரப்பா. நிலக்கரி ஊழல், அரசு நில ஒதுக்கீட்டு ஊழல்களில் சிக்கி பின்னர் அதிலிருந்து தப்பினார்.
தற்போது வருவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிறுத்தி, ‘மாற்றத்திற்கான யாத்திரை’ என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு எடியூரப்பா ரெய்ச்சூருக்கு சென்றபோது, அவரது மூக்குக் கண்ணாடி காணாமல் போயுள்ளது. விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்செட் ஆன எடியூரப்பா தனக்கு கண்ணாடி வேண்டும் என்று கூறியுள்ளார். அருகிலிருந்த பாஜக நிர்வாகிகள் ராய்ச்சூரில் இருக்கும் ஏதாவது ஒரு கடையில் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
ஆனால், தான் அணியும் கண்ணாடி பெங்களூருவில் தான் கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும், அங்கே சென்று அதை வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால், இதனை உடனடியாக வாங்கி வர சாத்தியமில்லை என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
உடனே அவர் ஹெலிகாப்டரை எடுத்துப் போய் வாங்கி வரச் சொல்லியுள்ளார். இதனையடுத்து அவரது உதவியாளர் உடனடியாக ஹெலிகாப்டரில் பெங்களூருக்கு சென்று கண்ணாடி வாங்கி வந்துள்ளார்.