ஒன்றும் தெரியாவிட்டாலும் பொய் கூறுங்கள் - தொண்டர்களுக்கு பாஜக தலைவர் அறிவுரை

உங்களுக்கு எதுவும் தெரியாது என்றால், ஏதாவது பொய் அல்லது உங்களுக்குத் தெரிந்த எதையாவது சொல்லுங்கள் என்று கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான கே.எஸ்.எஸ்.ஈஸ்வரப்பா பேசியது அம்பலமாகி இருக்கிறது.

by Lenin, Dec 15, 2017, 18:56 PM IST

உங்களுக்கு எதுவும் தெரியாது என்றால், ஏதாவது பொய் அல்லது உங்களுக்குத் தெரிந்த எதையாவது சொல்லுங்கள் என்று கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான கே.எஸ்.எஸ்.ஈஸ்வரப்பா பேசியது அம்பலமாகி இருக்கிறது.

Eshwarappa

இவர் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக பதவி வகித்தவர் கே.எஸ்.எஸ்.ஈஸ்வரப்பா. இவர், கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மாநிலத்தின் கொப்பல் பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில், “நாமெல்லாம் அரசியல்வாதிகள். எதையாவது பற்றிப் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதைப் பற்றித் தெரியாது என்று நாம் ஒருபோதும் சொல்லக்கூடாது. அது பற்றி உண்மையிலேயே உங்களுக்கு எதுவும் தெரியாது என்றால், ஏதாவது பொய் அல்லது உங்களுக்குத் தெரிந்த எதையாவது சொல்லுங்கள்” என்று அந்த வீடியோவில் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், “வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியாவைத் தாக்குவதற்கான தைரியம் பாகிஸ்தானுக்கு இருந்ததில்லை. ஆனால் மன்மோகன்சிங் பிரதமர் ஆனபோது ​​இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்று நீங்கள் சொல்ல வேண்டும். மோடி பிரதமராக ஆன உடனே 10 பாகிஸ்தான் வீரர்களின் கதையை அவர் முடித்தார் என்று நீங்கள் கூற வேண்டும்.

நீங்கள் இந்த விஷயங்களைப் பற்றி ஒன்றும் அறிந்திருக்கவில்லை என்றால், ஒன்றும் பிரச்சனையில்லை. பிரதமர் மோடியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய கதையை அவிழ்த்து விடுங்கள். நீங்கள் கூறப் போகும் பொய்யால், என்ன நடக்கிறது என்பதைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் யார் வீட்டிற்காவது போகும் போது, அங்கே இருப்பவர்கள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமராக இருந்தபோது நல்ல நிர்வாகத்தை வழங்கினார் அல்லது முதலமைச்சர் சித்தாராமையா தலித்துகளுக்கு நிறையச் செய்திருக்கிறார் என்று சொல்லும் போது, நீங்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தால், நாம் கடையை மூடிக் கொண்டு செல்ல வேண்டியதுதான்“ என்று ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் கேழ்வி எழுப்பியபோது, அது எங்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்று மட்டும் கூறிய அவர் மேற்கொண்டு கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

You'r reading ஒன்றும் தெரியாவிட்டாலும் பொய் கூறுங்கள் - தொண்டர்களுக்கு பாஜக தலைவர் அறிவுரை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை