ராகுல்காந்தி பிரதமராக தெலுங்கு தேசம் எம்.பி யோசனை

Jul 7, 2018, 10:29 AM IST
ராகுல்காந்தி, பிரதமராக வேண்டும் என்றால், அவருக்கு பிராமணப் பெண்ணாக பார்த்து செய்து வைக்க வேண்டும் என தெலுங்குதேசம் எம்.பி திவாகர் ரெட்டி யோசனை தெரிவித்திருக்கிறார். 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில், ராகுல்காந்தி பிரதமராக  தெலுங்கு தேச எம்.பி திவாகர் ரெட்டி யோசனை தெரிவித்துள்ளார்.  
 
"உத்தரப்பிரதேசத்தில் வாழும் பிராமணர்களின் ஆதரவு, ராகுலுக்கு தேவை. அது கிடைக்க வேண்டும் என்றால், அவர் ஒரு நல்ல பிரமாணப் பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் ராகுல்காந்தி பிரதமராக முடியும்" எனக் கூறியுள்ளார். 
 
"கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, சோனியகாந்தியிடம் இதை கூறினேன். ஆனால் எனது யோசனையை கேட்க சோனியா மறுத்துவிட்டார். ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்காகவே ஆந்திர மாநிலத்தை சோனியா காந்தி இரண்டாக பிரித்தார். ஆனால் அது சரியான முடிவு இல்லை " என திவாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 

You'r reading ராகுல்காந்தி பிரதமராக தெலுங்கு தேசம் எம்.பி யோசனை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை