சுனந்தா புஷ்கர் வழக்கில் சசி தரூருக்கு ஜாமின்!

Jul 7, 2018, 13:26 PM IST

காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான சசி தரூருக்கு, மனைவி சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இந்த வழக்கில் தரூருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவரின் முன் ஜாமீனை, ஜாமீனாக மாற்றம் செய்துள்ளது டெல்லி நீதிமன்றம். ஜாமீனுக்குத் தேவையான 1 லட்ச ரூபாயை தரூர் செலுத்தினார். இதையடுத்து, வெளிநாட்டுக்கு செல்ல கூடாது என்ற நிபந்தனையுடன் சசி தரூருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதற்கு சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானிய பத்திரிகையாளருடன் தொடர்பு வைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் அவரது கணவர் சசி தரூர் மீது குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட ஒரே ஒருவர் சசி தரூர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானது, அடிப்படை ஆதாரமில்லாதது. பழிவாங்கும் நோக்கில் ஜோடிக்கப்பட்ட வழக்கு’ என்று தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் சசி தரூர்.

You'r reading சுனந்தா புஷ்கர் வழக்கில் சசி தரூருக்கு ஜாமின்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை