நிர்பயா வழக்கு... மறுசீராய்வு மனு மீது இன்று தீர்ப்பு

நிர்பயா வழக்கு... மறுசீராய்வு மனு மீது இன்று தீர்ப்பு

Jul 9, 2018, 09:59 AM IST

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், 4 குற்றவாளிகள் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.

supreme court

டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 12-ஆம் தேதி, மருத்துவ மாணவி நிர்பயாவை, பேருந்தில் கடத்திச் சென்ற 6 பேர் கொண்ட கும்பல், அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்யப்பட்ட நிலையில், பேருந்து ஓட்டுனர் ராம்சிங் என்பவர், சிறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மற்ற 5 பேரில் ஒருவர், சிறுவன் என்பதால், அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், மற்ற 4 பேருக்கும் தூக்குத்தண்டனை விதித்து, டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி, 4 பேரும் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்த நிலையில், இன்று நண்பகலில் தீர்ப்பு வெளியாகிறது.

You'r reading நிர்பயா வழக்கு... மறுசீராய்வு மனு மீது இன்று தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை