அதிகரிக்கும் மோதல்: தொடருமா பாஜக- ஐஜத கூட்டணி?

Jul 9, 2018, 20:25 PM IST

இன்று ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கியப் புள்ளிகள் சந்தித்து ஒரு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதையடுத்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘நாங்கள் பாஜக-வுக்கு ஆதரவாகவோ, உதவியாகவோ அல்லது எதிராகவோ இல்லை.

அனைத்து மாநிலங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிட முடியும். எங்கள் கட்சியின் கொள்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்’ என்று சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் சந்திப்பில், ‘நம்மை ஒதுக்க நினைப்பவர்கள் ஒதுக்கப்படுவார்கள்’ என்று நிதிஷ் குமார் கூறியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பிகாரைப் பொறுத்தவரை நிதிஷ் குமார், மாநிலத்துக்கு சிறப்புப் பொருளாதார அந்தஸ்து மற்றும் அமைச்சரவையில் பதவி ஆகியவையை எதிர்பார்த்துள்ளார்.

ஆனால், இரண்டிலும் பாஜக இதுவரை குறிப்பிடத்தக்க முடிவை எடுக்காததால், நிதிஷ் கொதிப்பில் இருப்பதாக தெரிகிறது. இந்த அதிருப்தி குறித்து பாஜக-வுக்கும் ஐஜத கட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

You'r reading அதிகரிக்கும் மோதல்: தொடருமா பாஜக- ஐஜத கூட்டணி? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை