இந்திய விமானப் படை உடன் கைகோக்கும் இஸ்ரோ!

Jul 10, 2018, 21:17 PM IST

விண்வெளிக்கு மனிதனை ஏற்றிச்செல்ல்லும் விண்கலத்தைத் தயாரிக்கும் தொழில்நுட்ப உருவாக்க முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஏரோஸ்பேஸ் என்ற நிகழ்ச்சியில், இஸ்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி கே. சிவன் கூறுகையில், “மிகவும் நுட்பமான சவால் நிறைந்த தொழில்நுட்பமான, மனிதனை விண்வெளிக்கும் அனுப்பும் இந்தியாவின் கனவின் மீதான முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ”மனிதனை ஏற்றிச்செல்வதற்கான விண்கல தொழில்நுட்பம் சிறப்பாகவே சோதனை செய்யப்பட்டது. அபாய காலத்தில் காற்றியக்கவியல் தொழில்நுட்பம் மூலம் பாராச்சுட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு அபாய நிலையில் இருக்கும் விண்கலத்திலிருந்து அதில் பயணிக்கும் மனிதன் தப்பிக்க முடியும்” என்றும் சிவன் தெரிவித்தார்.

மனிதன் அபாய காலத்தில் விண்கலத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனை ஓட்டமே வெற்றி பெற்றது இஸ்ரோவின் சாதனையாகக் கருதப்படுகிறது. “நாங்கள் சோதனை முயற்சிக் காலத்தில் தான் இருக்கிறோம். இன்னும் நாங்கள் மேம்படுத்திக் கொள்ள நிறைய உள்ளது. இந்திய விமானப் படை உடனும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துடனும் இணைந்து எங்கள் திட்டத்தை மேலும் மெருகேற்ற வடிவமைப்பு செய்ய உத்தேசித்துள்ளோம்” என்றும் சிவன் தெரிவித்துள்ளார்.

You'r reading இந்திய விமானப் படை உடன் கைகோக்கும் இஸ்ரோ! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை