வடகொரியா மீதான தடை- முழு விலக்கு இதுவரையில் இல்லை!

Jul 10, 2018, 21:25 PM IST

அமெரிக்கா ஒரு கேங்க்ஸ்டர் போல் செயல்படுகிறது என்ற வடகொரியாவின் குற்றச்சாட்டு விமர்சனத்தை சற்றும் பொருட்படுத்தாமல், வடகொரியா அணு ஆயுத அழிப்பை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் தான் அந்நாட்டின் மீதான தடைகள் முற்றிலுமாக விலக்கப்படும் என எளிமையாகத் தெரிவித்துவிட்டார், அமெரிக்க செயலர் மைக் பாம்பியோ.

அமெரிக்காவின் கோரிக்கைகள் தரும் அழுத்தம் முழுமையான அணு ஆயுத அழிப்புக்கு வழிவிட்டது போக அமெரிக்கா- வடகொரியா இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பங்கம் விளைவிப்பதாகவே உள்ளதென வடகொரியா தரப்பில் பேசப்படுகிறது.

வடகொரியாவின் அழுத்தம் நிறைந்த பேச்சு பேச்சுவார்த்தைக்கு தூண்டும் ஒரு வித முறையாகவே தெரிகிறது. ஆனால், பயோங்க்யாங் நகரில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் மத்திய ஏதோ ஒரு வெறுமை ஏற்பட்டுள்ளதாகவே உணரப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் ஒரு கருத்து நிலவி வருகிறது.

அமெரிக்க செயலாளர் பாம்பியோ தற்போது ப்யோங்க்யாங் நகருக்கு பயணம் மேற்கொண்டதற்கான முக்கியக் காரணமே அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இருவருக்கும் இடையே கடந்த மாதம் சிங்கப்பூரில் நடந்த பேச்சுவார்த்தை குறித்தும் அணு ஆயுத ஒழிப்பை முற்றிலுமாக மேற்கொள்வது குறித்தும் வடகொரியா கொடுத்த வாக்குறிதியை நினைவுப்படுத்தி அதை உறுதிப்படுத்தத் தான்.

You'r reading வடகொரியா மீதான தடை- முழு விலக்கு இதுவரையில் இல்லை! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை