நல்ல உணவுப் பழக்கம் என்பது உடல் ரீதியிலும் மன ரீதியிலும் நேர்மறையான எண்ணங்களைத் தோன்றவைக்கும்.
ஆனால், துரித உணவுகளால் எதிர்மறை எண்ணங்கள், ஆரோக்கியம் கெடுதல் போன்றவை ஏற்படும். ஆனால், தற்போது ‘நியூராலஜி’-யில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், ‘அதிக துரித உணவு உட்கொள்வது உடல் நலத்துக்கு மட்டும் கேடு தருவது அல்ல. மூளை வளர்ச்சியையும் தடுக்கவல்லது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வின் படி, அதிக துரித உணவு சாப்பிடுவதால், மூளையின் அளவு 2 மிமீ குறைவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், நல்ல உட்டச்சத்து நிரம்பிய உணவைச் சாப்பிடுபவர்களின் மூளை 3.6 மிமீ அளவுக்குக் கூடுதலாக வளர்ச்சி பெருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வெறும் மூளை வளர்ச்சியுடன் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. இதன் மூலம், சீக்கிரமே முதுமையும் வந்துவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து டயட்டீஷியன் மோனிஷா அசோகன், ‘அளவுக்கு அதிகமாக துரித உணவை உட்கொள்வது மூளைச் சம்பந்தப்பட்ட விஷயங்களை பாதிக்கும். இது நியாபக சக்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.